கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதன்படி, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை சிவானந்தா காலனியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அப்போது திமுக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பிரச்சாரத்தை நிறைவு செய்து வைத்தார்.
தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Lok Sabha Election 2024: கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார் (திமுக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), அண்ணாமலை (பாஜக) மற்றும் கலாமணி (நாதக) ஆகியோர் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
Lok Sabha Election 2024
Published : Apr 17, 2024, 10:22 PM IST
அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சிங்காநல்லூர் பகுதியிலும், பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை மசக்காளிபாளையம் பகுதியிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர். அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வடவள்ளி பகுதியிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
இதையும் படிங்க:திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெப்பநிலை.. 11 இடங்களில் சதம் அடித்த வெயில்! - Today High Temperature