கோயம்புத்தூர்: தான் இறந்து விட்டால் தனது உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது விருப்பப்படி இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டுள்ளது. ஞானபாரதியின் உடலை ESI மருத்துவமனையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பெற்றுக்கொண்டனர்.
வடவள்ளி நவாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாரதி (76). கோவை நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஞானபாரதி, உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில், தான் இறந்து விட்டால் உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதன்படி, அவரது உடல் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.