தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.4 கோடி நிலத்தை ஏமாற்றி கிரையம் செய்ததாக கோவை எஸ்.பி அலுவலகத்தில் புகார்! - coimbatore sp office - COIMBATORE SP OFFICE

Coimbatore land cheating case: 30 லட்சம் ரூபாய் கடன் தொகைக்காக ரூ.4 கோடி மதிப்பிலான விவசாய நிலத்தை அடமானம் என்று கூறி கிரையம் பத்திரப்பதிவு செய்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த வெள்ளியங்கிரி குடும்பத்தினர்
புகார் அளித்த வெள்ளியங்கிரி குடும்பத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 12:54 PM IST

கோயம்புத்தூர்: ஆலாந்துறையை அடுத்த போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி(98). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தின் பெயரில் வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.

அந்த கடன் தொகைக்காக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து வங்கியில் இருந்து தனது நிலத்தை மீட்பதற்காக கரூரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்ற பைனான்சியரிடம் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடன் தொகைக்கு அடமானமாக அந்த நிலத்தை கேட்டதையடுத்து அதற்கு ஒப்புக்கொண்ட வெள்ளியங்கிரி மற்றும் அவரது மகன், மகள்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று அடமான பத்திரம் என நினைத்து கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளனர்.

வழக்கறிஞர் பூர்ணிமா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த வெள்ளிங்கிரி குடும்பத்தினர் அதில் சோளம் பயிரிட்டிருந்த சூழலில், நேற்று பிற்பகல் அங்கு சென்ற ஈஸ்வரமூர்த்தியின் மகனான அபிஷேக் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் அந்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியை துவங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது தங்கள் நிலத்தில் நீங்கள் எப்படி கம்பி வேலி அமைக்கலாம் என வெள்ளிங்கிரி குடும்பத்தினர் கேள்வி எழுப்ப, அந்த கும்பல் அவர்களை அச்சுறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும், பின்னர் அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளம் பயிர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அழிக்க துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளிங்கிரி, அவரது மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர் வழக்கறிஞருடன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பூர்ணிமா கூறுகையில், "அடமானம் என்ற பெயரில் பத்திரப்பதிவு செய்வதற்காக படிப்பறிவு இல்லாத வெள்ளிங்கிரி, அவரது குடும்பத்தினரை அழைத்து சென்று ஈஸ்வரமூர்த்தி பதிவு அலுவலகத்தில் கிரையம் என்று கூறாமல் பத்திரப்பதிவு செய்து மோசடி செய்ததாக கூறினார். கடந்த ஒன்றரை ஆண்டாக இது குறித்து எந்த தகவலும் அறியாமல் இருந்த வெள்ளிங்கிரி மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்டோர் வந்து தங்களது நிலம் என்று கூறும் போது தான் அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் ஈஸ்வரமூர்த்தி பிரபல அரசியல் கட்சியில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதன் அடிப்படையிலேயே இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்த போது காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியதாகவும், அதன் அடிப்படையில் வெள்ளிங்கிரியின் மருமகள் மற்றும் மகன்கள் உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு சென்ற நேரத்தில் முழுவதுமாக கம்பி வேலி அமைத்த ஈஸ்வரமூர்த்தியின் ஆட்கள் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தற்போது கையகப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 30 லட்ச ரூபாய் கடனுக்காக 4 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை மோசடியாக அபகரித்தவுடன் அங்கு பயிரிடப்பட்டிருந்த சோள பயிர்களையும் ஜேசிபி மூலம் அழித்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் அபிஷேக் மற்றும் பிரச்சனை செய்த 10 நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கோவை அருகே வீட்டில் புகுந்து கோழியை வேட்டையாடிய சிறுத்தை.. வைரலாகும் வீடியோ - COIMBATORE LEOPARD

ABOUT THE AUTHOR

...view details