கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 5) முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசியபடி மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 6) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்த சூழலில், நேற்று (ஜூன் 6) இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
இந்தச் சூழலில், கடலூர் அடுத்த வழி சோதனை பாளையம், ராமாபுரம், புதுக்குப்பம், சின்னதானாங்குப்பம் புலியூர், சமுட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு, தற்போது வாழைத்தார்கள் அறுவடைக்குத் தயாராகி வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்த காரணத்தினால், வழி சோதனை பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு முறிந்து சாய்ந்தது.
இதன் காரணமாக வாழை விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மேலும், இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "கடலூர் வழி சோதனை பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் வாழை மரங்கள் கடந்த ஜூலை மாதம் பயிரிடப்பட்டு இருந்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த 10 மாதத்திற்கும் மேலாக தங்களது பிள்ளைகள் போல் வாழை மரங்களை பாதுகாத்து வளர்த்து வரப்பட்டன.