திருச்சி:திருச்சியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் பங்கேற்று மத்திய பாஜக அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் வைரமணி,
மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக,தமுமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டவர்.
இதனையடுத்து செய்தியாளருக்குப் பேட்டி அளித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில் “தமிழகத்தில் திமுக 35 இடங்களில் வெல்லும் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெறும் என ஒரு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது அதில் ஒரு சிறிய திருத்தம் 35 சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பெட்டியைத் திறந்து பார்த்தால் 40ம் இருக்கும் இந்தியா முழுவதும் 400 இருக்கும். கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தாண்டி இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.