தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குலசை அம்மனுக்கு சுமார் அரை கோடி ரூபாய் வருவாய்! - KULASAI MUTHARAMMAN TEMPLE

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வாயிலாக, சுமார் அரை கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குலசை முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
குலசை முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 1:38 PM IST

தூத்துக்குடி: புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அதில், ரூ.47.55 லட்சம் ரொக்கமாகவும், 91.400 கிராம் தங்கமும், 560 கிராம் வெள்ளியும் வருவாயாக கிடைத்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவிற்கு புகழ் பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

சுமார் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தென்மாவட்டங்கள் மற்றும் கோவை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து இந்த தசரா திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.

குலசை அம்மனுக்குக் கிடைத்த காணிக்கை (ETV Bharat Tamil Nadu)

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோயிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 18 நிரந்தர உண்டியல்கள் உள்ளது. இந்த 18 உண்டியல்களிலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க:43 நாட்களில் நிரம்பிய பழனி முருகன் கோயில் உண்டியல்.. ரூ.5.3 கோடி பக்தர்கள் காணிக்கை

இந்த நிலையில், அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 20ஆம் தேதி வரையிலான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று (நவ.22) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காணிக்கை விவரம்:

ஒரு மாதத்தில் மட்டும் பக்தர்கள் காணிக்கையாக ரூ.47 லட்சத்து 55 ஆயிரத்து 317 ரொக்கமாகவும், தங்கம் 91 கிராம் 400 மில்லி கிராமும், வெள்ளி 560 கிராம் கிடைத்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details