கோவை: தெற்கு ரயில்வேயில் கூட்ட நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களில் வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயணிகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, கோவை வழியாக இயக்கப்படும் நீட்டிப்பு செய்யப்பட்ட முக்கிய ரயில்கள் விபரங்கள் பின்வருமாறு:-
வ.எண் | ரயில் பெயர் | நீட்டிப்பு செய்யப்பட்ட காலம் |
---|---|---|
1. | கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர ரயில் | 28.06.24 வரை |
2. | ஹஸ்ரத் நிஜாமுதீன் கொச்சுவேலி - சாலிமர் வாராந்திர ரயில் | 1.07.24 வரை |
3. | சாலிமர் - கொச்சுவேலி வாராந்திர ரயில் | 28.06.24 வரை |
4. | கொச்சுவேலி - பெங்களூரு, வாராந்திர ரயில் | 2.07.24 வரை |
5. | பெங்களூரு - கொச்சுவேலி வாராந்திர ரயில் | 3.7.24 வரை |