தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணமோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! - SAVUKKU SHANKAR KARUR CASE

SAVUKKU SHANKAR KARUR CASE BAIL: பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண் 1 நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 3:18 PM IST

கரூர்:கரூர், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூடிபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, தங்கள் யூடியூபில் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளரும் என கூறியதால், கிருஷ்ணன் தனது மனைவியிடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்று விக்னேஷ்வரனிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், விக்னேஷ் சொன்னபடி நடந்து கொள்ளாததால், விக்னேஷை தொடர்பு கொண்ட கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்டபொழுது, பணம் தர முடியாது என ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார்.

அதன்படி, விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், சவுக்கு சங்கரை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து கடந்த ஜூலை 9ஆம் தேதி கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

போலீசாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, 4 நாள் மட்டும் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார். கஸ்டடி முடிந்து இரண்டாவது முறையாக சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 23) வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. அதில் சவுக்குசங்கர் தரப்பில் இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரப்பட்ட நிலையில், ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:வழக்கறிஞர்களுக்கான தொழில் நடைமுறைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த கோரி மனுத்தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details