கரூர்:கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் வசிப்பவர்கள் அஷ்வின், மணிகண்டன், சுப்ரமணியன். இவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் நடக்கவிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (Live Concert) இசை நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வதற்காக, ஏ.சி.டி.சி நிறுவனம் செய்த விளம்பரத்தின் அடிப்படையில், ரூ.12 ஆயிரம் செலுத்தி அதற்கான நுழைவுச் சீட்டை பெற்றுள்ளனர்.
ஆனால், மேற்கண்ட தேதியில் மழை காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகக் கூறி, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் வேறு தேதிக்கு ஒத்தி வைத்தனர். ஆனால், அவ்வாறு ஒத்தி வைத்த தேதியில் தன்னால் கலந்துகொள்ள இயலாது என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், தான் செலுத்திய தொகையை திருப்பி அளிக்குமாறு கேட்டுக் அஷ்வின் கொண்டுள்ளார்.
அப்போது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி நிறுவனமும் மேற்கண்ட கட்டணத் தொகையை திருப்பி அளிப்பதாக உறுதியளித்துவிட்டு, இன்று நாளை எனக் கூறி இமெயில் மூலம் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அஸ்வின் கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், தான் செலுத்திய கட்டணத் தொகை ரூ.12 ஆயிரத்தையும், தனக்கு பணத்தை திருப்பி அளிக்காமல் காலம் தாழ்த்தி ஏற்படுத்திய மனஉளைச்சலுக்கும், சேவைக்குறைபாட்டிற்கும் என ரூ.50 ஆயிரமும், இதற்கு செலவுத் தொகையும் அளிக்கக் கோரி கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் மனுத் தாக்கல் செய்தார்.