சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரம் குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கை, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 18 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்து பலருக்கு வயிற்று வலி, கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 115 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்த வழக்கை, சிபிசிஐடி வசம், தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: "முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் பதவி விலக வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி காட்டம் - kallakurichi illicit liquor death
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தீவிர ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளார். கள்ளச்சாராய விற்பனை புகாரில், 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளனர்.