சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று (ஆக.18) மாலை நடைபெற இருக்கிறது. இந்த விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் தமிழக அரசியல் தலைவர்கள், தேசிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக விழா நடைபெறும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"18.08.2024 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை. நேப்பியர் பாலம், வாலாஜா சாலை. அண்ணா சாலை மற்றும் கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.
3. கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்துசெல்லுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.