சிவகங்கை:நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ரூத் (40). இவர் தனது குடும்பத்துடன் 13 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வசித்து வருகின்றனர். மேலும், இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் 13 ஆண்டுகளாக இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அதே பள்ளியில் அவரது மகள் அக்ம்லா (16) எட்டாம் வகுப்பு வரையும், மற்றொரு மகள் மவுங்கலா (14) ஐந்தாம் வகுப்பு வரையும் படித்தனர். இந்நிலையில், கரோனா காலக்கட்டத்தில் அவரது இரண்டு மகள்கள் மட்டும் நாகலாந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நாகலாந்தில் உள்ள பள்ளியில் அக்ம்லா 10-ம் வகுப்பு வரையும், மவுங்கலா 7-ம் வகுப்பு வரையும் படித்தனர்.
இந்நிலையில், இருவரும் சில மாதங்களுக்கு முன் மீண்டும் சிங்கம்புணரிக்கு வந்தனர். அப்போது சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மவுங்கலா 8-ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட நிலையில், அக்ம்லா 11ஆம் வகுப்புக்கு சேருவதற்காக பள்ளிக்குச் சென்றபோது, அக்ம்லா 10-ம் வகுப்பு முடித்துள்ளதாக கூறுவதால், அவரை பள்ளியில் சேர்க்க குடிபெயர்வு, உண்மைத் தன்மை சான்று கேட்டுள்ளனர். ஆனால், நாகலாந்தில் அந்த சான்றுகளை பெற முடியாததால் அவரை பள்ளியில் சேர்ப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது வந்துள்ளது.