தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிதிஷ்குமார் ஒரு சுயநலவாதி' - ஜவாஹிருல்லா காட்டம்

MMK leader Jawahirullah: வாரணாசியில் கோயில் இருந்த இடத்தில் பள்ளிவாசல் இருப்பதாக மீண்டும் ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது என்றும், நிதீஷ் குமார் ஒரு சுயநலவாதி என்பதை நிரூபித்து உள்ளார் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Jawahirullah slams Bihar CM Nitish Kumar as a selfish
இந்தியா கூட்டணி குறித்து பாஜக வதந்தி கிளப்பி வருகிறது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 1:15 PM IST

Updated : Jan 28, 2024, 1:30 PM IST

திருச்சி: தென்னூரில் புதிதாக மேம்படுத்தப்பட்ட பள்ளிவாசலின் திறப்பு விழாவில் நேற்று (ஜன.27) மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல், முன்பு கோயிலாக இருந்தது என்று மீண்டும் ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது.

1991 வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு விதி சட்டம் மிக தெளிவாக பாபர் பள்ளிவாசலை தவிர, 1947ஆம் ஆண்டு யார் யார் வசம் எந்த வழிபாட்டு தலம், எந்த நிலையில் இருந்ததோ? கோயிலாக இருந்தது கோயிலாகவும், பள்ளிவாசலாக இருந்தது பள்ளிவாசலாகவும், குருத்துவாராக இருந்தது குருதுவாராவாகவும், தேவாலயம் ஆக இருந்தது தேவாலயம் ஆகவும் தொடர வேண்டும் என அந்த சட்டம் தெளிவாக குறிக்கிறது.

அது மட்டும் அல்லாமல், இது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் தொடுக்கப்படக் கூடாது என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய ஒன்றிய பாஜக அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைத்து வருகிறது.

அதனுடைய எடுத்துக்கட்டாகத்தான், 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்து ஜனநாயகத்தை, பாஜக படுகொலை செய்துள்ளது. இந்த ஆட்சியில் 75வது குடியரசு தினத்தை கொண்டாடினோம். அந்த குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு மையப்பொருளாக இருக்கக்கூடிய அரசியல் சாசன சட்டத்தை பாஜக அரசு சிதைத்து வருகிறது. அதன் மாண்புகளைக் கெடுத்து வருகிறது.

எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மதச்சார்பின்மையை காப்பாற்றுவதற்கு, நாட்டில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு ஆட்சி மாற்றம் மிக மிக அவசியம். இந்தியா கூட்டணி (INDIA Alliance) வலுவாக உள்ளது. அந்த கூட்டணியில் குழப்பம் இருப்பதாக, பாஜக வேண்டுமென்றே வதந்திகளை கிளப்பிவருகிறது' என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், 'அதிக நாடாளுமன்றத்தை அனுப்பக்கூடிய உத்தரப் பிரதேசத்தில் சமாத்வாஜி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் உடன்பாட்டிற்கு வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. அதேபோல, மேற்கு வங்காளத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். நிதிஷ்குமார் உள்ளுக்குள் இருந்து அவர் ஒரு சுயநலவாதி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

மேலும், பீகாரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான அர்.ஜே.டி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அங்கிருந்து வரக்கூடிய தகவல்கள் இந்தியா கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இந்தியா கூட்டணியில் எந்த சலசலப்பும், அவை அனைத்தும் பாஜக பரப்பி வரக்கூடிய வதந்தி ஆகும்.

இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியும் உத்தரப் பிரதேசத்தில் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள உள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர்கள், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். ஆகவே, இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது' என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

இதையும் படிங்க:சென்னை ஏர்போர்ட்டில் ஹரியானாவை சேர்ந்த சிஐஎஸ்எஃப் வீரர் உயிரிழப்பு.. காரணம் என்ன..?

Last Updated : Jan 28, 2024, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details