தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்க ஹிந்தி என்ற போர்வையில் வருகிறது மத்திய அரசு" - காதர் மொய்தீன் விமர்சனம்! - IUML LEADER KHADHER MOHIDEEN

சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுப்பதற்காக ஹிந்தி என்ற போர்வையுடன் மத்திய அரசு வருவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் விமர்சனம் செய்தார்.

காதர் மொய்தீன் செய்தியாளர் சந்திப்பு
காதர் மொய்தீன் செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2025, 4:34 PM IST

திருச்சி:இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மாணவர் பேரவையின் சார்பில் சமூக நல்லிணக்க மீலாது விழா மாநில பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா மாநிலத் தலைவர் அன்சர் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னாள் எம்பியுமான காதர் மைதீன் கலந்து கொண்டு நிறைவுறையாற்றினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். இது திருத்தச் சட்டம் அல்ல. வக்புவை ஒழிக்கக்கூடிய சட்டமாகும். இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்ததால் அதை நிறைவேற்ற முடியாமல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் நாடு முழுவதும் இந்த சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்று நடத்தப்பட்ட ஆய்வில் 95 சதவீத கருத்துக்கள் இந்த மசோதா சரியானது அல்ல என கூறியுள்ளனர். மீண்டும் அதே சட்டத்தை முன்மொழியக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராணுவ சொத்துக்களை, ரயில்வே சொத்துக்கள் எப்படி அரசு சொத்துக்களாக உள்ளதோ அதுபோல வக்பு சொத்துக்களை அரசு சொத்துக்களாக மாற்ற முயற்சி நடக்கிறது. வக்பு சட்டம் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அடிப்படையான சட்டம். நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் வைத்து மாற்றம் செய்ய முடியாது என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் கல்விக்கான நிதியை தர முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளரே என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றத்தையும் கெடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாகத் தான் இதையும் கருதுகிறோம். இரு மொழி கொள்கை இந்த மண்ணில் வேரூன்றிய தத்துவம்" என்றார்.

திருப்பரங்குன்றம் தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அண்ணாமலை பன்றி வெட்டப்படும் என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமான வழிபாட்டு முறைகள் நடைபெற்ற வருகின்றன. அந்த பகுதியில் 6 சமுதாய மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சிலர் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மத நல்லிணக்க அமைப்பு குழு அமைத்து மாவட்ட ஆன்மீக பெருமக்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு நல்லிணக்க பிரச்சாரத்தை தொடர்வதற்கு முடிவெடுத்துள்ளோம்.

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவிதமாக உயர்த்த வேண்டும். சமஸ்கிருதத்தை உயிர் பெற வைக்கும் என்ற முயற்சியாக இந்தி என்ற போர்வையில் மத்திய அரசு வருகிறது" என்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details