தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக மீட்பதே முக்கியம்” - மயில்சாமி அண்ணாதுரை! - Mylswamy Annadurai - MYLSWAMY ANNADURAI

Mylswamy Annadurai: போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மற்றொரு விண்கலன் அனுப்பி புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக கொண்டு வரவேண்டும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை
முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 10:14 PM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள மலைக் கிராமமான சிந்தக்கமணி பெண்டா ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அருண் என்பவர் ரோட்டரி சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு, ஆசிரியர் மாணவர்களுக்காக கண்டுபிடித்த கண்ணாடி தொடுதரையை திறந்து வைத்தார்.

மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரையிடம், போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “தற்போது உள்ள நிலைமையில் அவர்கள் வருவது அவ்வளவு சிரமம் இல்லை. அது சரிசெய்யப்பட வேண்டும். இல்லையென்றால், மற்றொரு விண்கலன் அனுப்பி அவர்களைக் கொண்டு வரவேண்டும். அதற்காக தான் அந்த காலகட்டம் எடுத்துள்ளார்கள். அதில் தவறு இல்லை. அவர்கள் பத்திரமாக வரவேண்டும் என்பதே முக்கியம்.

கிராமப்புறத்தில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்க எதுபோன்ற திட்டங்கள் உள்ளது குறித்த கேள்விக்கு, “கிராமப்புற பகுதி மாணவர்கள் கற்றல், கற்பித்தல், கண்டுபிடித்தல் என்ற முறையில் வகுப்பறையைத் தாண்டி ஓர் உள்கட்டமைப்பு முறையில் மாணவர்களிடையே போட்டித் திறனை உருவாக்கி அவர்களை சர்வதேச அளவில் செல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆளுநர் பட்டியலில் இடம்பெறாத தமிழிசை.. அண்ணாமலையை சாடிய கார்த்தி சிதம்பரம்!

ABOUT THE AUTHOR

...view details