தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 7:40 PM IST

ETV Bharat / state

“2047ல் இந்தியர்களை நிலவில் இறக்கி மீண்டும் கொண்டுவர திட்டம்” - ஆசீர் பாக்கியராஜ் தகவல்! - IPRC DIRECTOR ASIR PACKIARAJ

ISRO Propulsion Complex director Asir Packiaraj: 2047ல் இந்தியர்களை நிலவில் இறக்கி அவர்களை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக விஞ்ஞானி மற்றும் இயக்குனர் ஆசீர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

ISRO Propulsion Complex director Asir Packiaraj
இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாக விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் (credits - ETV Bharat Tamil Nadu)

நிகழ்ச்சியில் பேசும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாக விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் (credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி:12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலமாக கல்லூரி கனவுகள் வழிகாட்டி நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் பொறியியல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக விஞ்ஞானி மற்றும் இயக்குனர் ஆசீர் பாக்கியராஜ் பேசுகையில், “மாணவர்கள் உண்மையாக இருந்தால் நிச்சயம் ஆளுமையாளராக உருவாக முடியும். மாணவர்களின் வேகம், விவேகம் சீராக அமைந்தால், வாழ்க்கையில் உன்னத இடத்திற்குச் செல்ல முடியும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பணியை தவிர, மேலும் பல்வேறு பணிகள் அரசுப் பணியாக உள்ளன. அதற்கும் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளலாம். 2047ல் இந்தியர்களை நிலவில் இறக்கி, அவர்களை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது” என அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஜி.லட்சுமிபதி பேசுகையில், “மாணவர்கள் என்ன பாடங்களை படித்தாலும், புத்தகம் வாசிப்பது அவசியம். நாள்தோறும் அரை மணி நேரமாவது புத்தகம் வாசிக்கப் பழகுங்கள்” என்று கூறினார்.

மேலும், தமிழக அரசு பொது நூலக இயக்க இயக்குனர் இளம் பகவத், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வியின் அவசியம், அதன் முக்கியத்துவம், உயர் கல்வி படிப்பிற்கான வாய்ப்புகள், அதற்காக அரசு வழங்கும் உதவித்தொகை போன்றவைகள் குறித்து கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில், பெண்களின் உயர் கல்விக்காக அரசு வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், உயர்கல்விக்கான கல்விக்கடன் பெறுவது குறித்தும் விளக்குவதற்காக பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க:பட்டாசு ஆலை வெடிவிபத்து: 'விதிகளை மீறினால் குண்டாஸ் பாயும்' - விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை - Sivakasi Firecracker Explosion

ABOUT THE AUTHOR

...view details