தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் - சென்னை இடையேயான இண்டிகோ விமான சேவை நேரத்தில் மாற்றம்! - Salem to chennai flight service - SALEM TO CHENNAI FLIGHT SERVICE

Salem - Chennai flight service: சேலத்திலிருந்து சென்னைக்கு மதிய நேரத்தில் இயக்கப்பட்டு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானச் சேவை நேரம் மாற்றப்பட்டு மாலையில் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Salem - Chennai flight service
Salem - Chennai flight service

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 3:27 PM IST

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் காலை 10:35 மணிக்குப் புறப்பட்டு காலை 11:40 மணிக்குச் சேலம் சென்று விட்டு, அதே விமானம் மீண்டும் பகல் 12:40 மணிக்குச் சேலத்திலிருந்து புறப்பட்டு பகல் 1:50 மணிக்குச் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.

இந்த விமானத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாலையிலும் கூடுதலாக சென்னை - சேலம் - சென்னை இடையே விமானச் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், சேலத்திலிருந்து மதியம் சென்னைக்குப் புறப்பட்டு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேரம் மாலைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 5 மணிக்கு சேலத்திலிருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மாலை 6 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்கிறது. இதனால் மதியம் சேலம் - சென்னை இடையே, இயக்கப்பட்டு வந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டு மாலைக்கு மாற்றப்படுகிறது.

இதுபற்றி பயணிகள் தரப்பில் கூறுகையில், "ஏற்கனவே சேலம் - சென்னை இடையே மதியத்தில் இயக்கப்பட்டு வந்த விமானச் சேவை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். அதோடு கூடுதல் விமானச் சேவையாக, சென்னை - சேலம் - சென்னை இடையே பிற்பகல் மற்றும் மாலையிலும் விமானச் சேவையை இயக்க வேண்டும்.

கடந்த 2019ஆம் ஆண்டில், சென்னை - சேலம் - சென்னை இடையிலான விமானச் சேவை காலை, மாலை என இரு நேரங்களிலும் இயக்கப்பட்டு வந்தது. அதேபோல், மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க:நெல்லை கான்வென்ட் பள்ளியில் குழந்தைகளுக்கு சீட் வாங்க விடிய விடியக் காத்திருந்த பெற்றோர்கள்! - Tvl Convent School Admission

ABOUT THE AUTHOR

...view details