சென்னை: மலேசியாவில் உள்ள பல்வேறு தீவுகளில் பினாங்குத் தீவும் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய தீவாகும். இங்கு பெருமளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பினாங்கு தீவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த தீவிற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர், தாய்லாந்து, சீயோல், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது
ஆனால், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு தமிழ் அமைப்புகள் தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.
ஆனால், இந்திய விமான நிலைய ஆணையம் அதற்கான அனுமதியை வழங்காததால் பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க:"எல்ஐசி இணையதளத்தை இந்தி திணிப்பு பிரச்சார கருவியாக மாற்றுவதா?" - முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
இந்த நிலையில், தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் இந்திய விமான நிலைய ஆணையம் பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் இந்தியாவில் இருந்து தொடங்க அனுமதி அளித்தது.