சென்னை:வட தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாவட்டம் | மழை அளவு (சென்டிமீட்டரில்) |
அவலாஞ்சி (நீலகிரி) | 10 சென்டிமீட்டர் |
மேல் பவானி (நீலகிரி) | 8 சென்டிமீட்டர் |
நடுவட்டம் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி) | 6 சென்டிமீட்டர் |
சின்கோனா (கோயம்புத்தூர்) , சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) , விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) , தேவாலா (நீலகிரி | 5 சென்டிமீட்டர் |
எமரால்டு (நீலகிரி) , கிளன்மார்கன் (நீலகிரி) , தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) | 4சென்டிமீட்டர் |
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), செருமுள்ளி (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) | 3 சென்டிமீட்டர் |
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):
அதிகபட்ச வெப்பநிலை: தூத்துக்குடி, 37.0 டிகிரி செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை: ஈரோடு, 19.0 டிகிரி செல்சியஸ்
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8:30 மணியளவில் ஒரிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவுகிறது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் சத்திஸ்கர் அருகில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை முதல் ஜூலை 26 வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.