அரியலூர்:அரியலூர் புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர், அப்பு என்ற விநாயக வேல். இவர் அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணி முதல் வருமான வரித்துறை நோடல் அதிகாரி மனோஜ் குமார் தலைமையிலான மூன்று குழுவினர், அரியலூர் நகரில் புது மார்க்கெட் தெரு 3வது சந்தில் உள்ள விநாயக வேலுக்குச் சொந்தமான வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அவரது தந்தை அண்ணாதுரை வீட்டிலும், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் ராணி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் சுமார் ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.