தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மிதமான மழை.. 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - Chennai Rains - CHENNAI RAINS

Chennai Rains: சென்னையில் நள்ளிரவு நேரத்தில் மிதமான மழை பெய்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருளுடன் கூடிய சாரல் மழை பெய்தது. செங்கல்பட்டு, கோவை, நெல்லை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 10:12 AM IST

சென்னை:சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சற்று அதிகமாக காணப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. குறிப்பாக ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக பெரம்பூர், கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து காலை வேலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும், சென்னை நகர் பகுதியில் வானம் இருள் சூழ்ந்து காணப்படுவதோடு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலோடு கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 15 வருசமா இவரு கடையில வடை 1 ரூபாய்தான்.. லாபத்தை எதிர்பார்க்காத 1 ரூபாய் வடை தாத்தா!

ABOUT THE AUTHOR

...view details