சென்னை:இந்தியாவின் வாகனப் போக்குவரத்தில் 5 சதவீத அளவுக்கு மட்டுமே சரக்கு லாரிகள் உள்ள நிலையில், சுமார் 65 சதவீதம் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இது கணிசமான அளவு காற்று மாசுக்கும், எரிபொருள் நுகர்வு செலவுகளுக்கும் இது வழிவகுக்கிறது. எனவே மின்சார சரக்கு லாரிகள் போன்ற கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்துவது அவசியமாகிறது.
இந்தநிலையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்துக்கான உயர் சிறப்பு மையம் (Centre of Excellence for Zero Emission Trucking –COEZET) மற்றும் ஓட்டுநர் மதிப்பீடு செயலித் திட்டம் (Project Driver Rating application –DRA) ஆகிய இரண்டு பெரிய திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓட்டுநர் மதிப்பீடு செயலித் திட்டம்:
- இதுபாதுகாப்பு மற்றும் ஆற்றல் திறன் குறித்த சரக்குலாரி ஓட்டுநர் நடத்தையை மதிப்பிட செயற்கை
நுண்ணறிவால் இயக்கப்படும் மொபைல் ஆப் - சரக்கு லாரி ஓட்டுநர்களிடையே பாதுகாப்பான, திறமையான ஓட்டுநர் நடத்தையை
ஊக்குவித்து செயல்படுத்த உதவும். - சாலை உள்கட்டமைப்பின் நிலையான சூழலுடன் தொடர்புடைய போதிய ஓட்டுநர்
நடத்தை குறித்து ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முன்கூட்டிய விழிப்புணர்வுத்
தகவல்கள் மொபைல் செயலியில் இருக்கும். - மாதத்திற்கு குறைந்தபட்சம் 4,000 கி.மீ. தூர இயக்கக்கூடிய சரக்கு லாரிகளின்
ஓட்டுநர்கள் இதில் பதிவு செய்ய வேண்டும்.
பயனரை நேரடியாகச் சென்றடையும் திட்டம் (Project Outreach) :
- கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து பற்றி சரக்கு லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்துதல். - ஓட்டுநர்கள், உதவியாளர்கள், மெக்கானிக்குகள், பெட்ரோல் பங்க் நடத்துவோர், வாகன
உதிரிபாக உற்பத்தியாளர்கள், குறைந்த அளவில் வாகனங்களை இயக்குவோர் உள்ளிட்ட
இறுதிப் பயனர்களிடையே கார்பன் உமிழ்வு இல்லாமை பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்த பிரச்சார நிகழ்வுகளை நடத்துதல். - குறைந்தபட்சம் 200 இடங்களில் நேரடி நிகழ்வுகள் மூலம் ஓட்டுநர்களை
நேரடியாகவும், பயனர்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான டிஜிட்டல் தகவல்
தொடர்புகள் மூலமாகவும் சென்றடையும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.