சென்னை:கொரட்டூரில் உள்ள அலையன்ஸ் தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில், ஹைதராபாத் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (பிப்.8) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆவடி பகுதியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.