தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண உறவை மீறிய பழக்கம்..? ஆவடி அருகே கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு! - illegal affair - ILLEGAL AFFAIR

avadi couple death: ஆவடி அருகே குடும்ப பிரச்சினையில் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்யா மற்றும் பிரகாஷ்
சத்யா மற்றும் பிரகாஷ் (Credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 10:39 AM IST

Updated : Jun 13, 2024, 11:20 AM IST

சென்னை: ஆவடி அடுத்த அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகன் மற்றும் 14 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், பிரகாஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சத்யாயாவுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், சம்பவத்தன்று பிரகாஷ் வேலை முடித்துவிட்டு மதிய உணவு சாப்பிட வீட்டுக்கு வந்தபோது, இருவருக்குள்ளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி சத்யா 'நீ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது எனக்குத் தெரியும்' என்று பிரகாஷிடம் கூறியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த சத்யா, படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் தனது மகனுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பிரகாஷும் மனமுடைந்து சமையல் அறையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாய், தந்தை இரண்டு பேரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டதால் பேரதிர்ச்சி அடைந்த மகன் ஆவடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பிரகாஷும், சத்யாவும் தனி தனி அறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து ஆவடி காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு உதவி எண் (Credit - Etv Bharat Tamil Nadu)

பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல:மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது 044-24640050 உதவி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்

இதையும் படிங்க: புதுச்சேரி விஷவாயு தாக்குதல்; உயிரிழந்த சிறுமிக்கு தங்க மூக்குத்தி அணிந்த பாட்டி..

Last Updated : Jun 13, 2024, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details