சென்னை:தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, 12ஆம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ள மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு, இன்று (பிப்.23) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த தனித்தேர்வர்கள், வரும் 24ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற அரசு இணையதளத்தின் மூலமாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.