சென்னை:தனியார் விடுதிகளில் உள்ள குளியலறை, படுக்கையறை போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் வைத்து விடுதி உரிமையாளர்கள் கைதாகும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. இதனால் குடும்பத்துடனோ அல்லது ஆண், பெண் சேர்ந்து விடுதிகளில் அறை எடுத்து தங்கும்போதோ, இதுகுறித்து ஒருவித அச்சமும் இருந்து வருகிறது. இந்த சூழலில், ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில் அருகே பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்களை வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை திடுக்கிட செய்துள்ளது.
இதுபோன்ற சூழலில் உடை மாற்றும் அறைகள், தனியார் விடுதிகள் போன்ற தற்காலிகமாக நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமராக்களை நாம் கண்டறிவதெப்படி? எந்தெந்த இடங்களில் கேமராக்களை பொறுத்த சாத்தியம் உள்ளது என்பவனவற்றை குறித்து சென்னையை சேர்ந்த சிசிடிவி கேமரா நிபுணர் ஸ்ரீ ராம் நம்மிடம் பகிர்ந்துள்ளார். அவற்றை தெரிந்துகொள்வோம்..
குண்டூசி ஓட்டை
நிபுணர் ஸ்ரீ ராம், '' தனியார் ஓட்டல், லாட்ஜில் உள்ள குளியறையில் உள்ள ஓடோனில், ஸ்பேரே அடிக்கும் மிஷின், டிவி செட் ஆப் பாக்ஸ், கடிகாரம், போட்டோ ஃப்ரேம் ஆகியவற்றிலும் கேமராவை ரகசியமாக பொறுத்துவார்கள். காகிதத்தில் குண்டு ஊசி வைத்து ஓட்டை போட்டால் இருக்கும் அளவே அந்த கேமராவிற்கு போதுமானது. அதிலேயே வீடியோ எடுத்துக்கொள்ளலாம், ஆனால், அவற்றை கண்டறிவது சிரமமானது.