நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் பேட்டி (video credit to ETV Bharat Tamil Nadu) சென்னை:சென்னை நுங்கம்பாக்கம் 4வது சந்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் பூங்காவைப் பராமரித்து வருபவர் சோனியா, வழக்கம் போல் கடந்த 5ஆம் தேதி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது, பூங்காவின் எதிரில் வசிக்கும் புகழேந்தி வளர்த்து வரும் 2 ராட்வீலர் இன நாய்கள் பூங்காவிலிருந்த 5 வயது குழந்தையைக் கடித்துக் குதறியது. இதில் குழந்தை பலத்த காயமடைந்தது.
குழந்தையைச் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 வயது குழந்தையை இன்று டிஸ்சார்ஜ் செய்யலாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், குழந்தையின் தந்தை ரகு கூறுகையில், "அனைத்து விதமான பரிசோதனையும் முடிவடைந்த பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்துடன் நடைபெற்ற ஆலோசனையின் பிறகு, முழுமையான சிகிச்சை முடிவடைந்த பிறகு டிஸ்சார்ஜ் செய்வதை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகக் குழந்தையின் தாத்தா ஏழுமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், "குழந்தைக்கு எதிர்காலத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாத வகையில், முழுமையான சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். மேலும், முழுமையான சிகிச்சை முடிவடைந்த பிறகு, 2 அல்லது 3 நாட்கள் கழித்தே டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும்" கூறினார்.
இதையும் படிங்க:சவுக்கு சங்கர் விவகாரம்: திருச்சி சைபர் கிரைம் அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர்! - Youtuber Felix Gerald