தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு லட்சம் கன அடியை தொட்ட ஒகேனக்கல் காவிரி.. பல்வேறு துறையினர் தொடர் கண்காணிப்பு! - HOGENAKKAL CAUVERY RIVER - HOGENAKKAL CAUVERY RIVER

HOGENAKKAL CAUVERY RIVER: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல் காவிரி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 3:27 PM IST

Updated : Jul 26, 2024, 8:32 PM IST

தருமபுரி:கர்நாடகா மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி உள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடியிலிருந்து 1.5 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 62,000 கன அடியாக இருந்தது. ஆனால், மாலை மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 92,000 கன அடியாக உயர்ந்தது. இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி 1,00,000 கன அடியை தொட்டது. இதன் காரணமாக மெயின் அருவி, சினியருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தொடர்ந்து, ஒகேனக்கல் சுற்றலாத் தலத்தில் பரிசல் இயக்கவும், அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது. மேலும், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம், காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கோயில் குளத்தில் ஜில் பண்ணும் நீர்நாய்கள்.. வியப்புடன் கண்டு ரசித்த கிராம மக்கள்!

Last Updated : Jul 26, 2024, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details