தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்.. நெட்டிசன்களுக்கு செக் வைத்த நீதிமன்றம்! - Sattai Duraimurugan case - SATTAI DURAIMURUGAN CASE

Sattai Duraimurugan case: திருச்சி எஸ்பி வருண்குமார் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் சாட்டை துரைமுருகன்
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் சாட்டை துரைமுருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 8:09 AM IST

மதுரை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமீன் கோரி மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் போலீசார், என்னை கைது செய்தனர். பின்னர் நீதிபதி சிறையில் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலை செய்தனர்.

கைது செய்யப்பட்டதற்கு எஸ்.பி. வருண் குமார்தான் காரணம் எனவும், விமர்சனங்களைச் சீமான் முன்வைத்திருந்தார். அதற்கு சமூக வலைத்தளங்களில் மோசமான கமெண்டுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக வருண்குமார் எஸ்பியால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "சாட்டை துரை முருகன் உள்ளிட்டோர் மீது காவல்துறை அதிகாரி வழக்குப்பதிவு செய்து தனது கடமையைச் செய்தார் என்பதற்காக, திருச்சி எஸ்பி வருண் குமார், மீது சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பதிவு செய்து வருகின்றனர். இது பணியில் உள்ள அதிகாரிகளை அச்சுறுத்தும் செயல். இவர்களை கைது செய்ய வேண்டும். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

அதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பற்றி மனுதாரர் எந்த இடத்திலும், எந்த சமூக வலைத்தளங்களிலும் தவறாக பதிவிடவில்லை. வருண்குமார் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததற்கு சில நிட்டிசன்கள் அவதூறாகப் பதிவு செய்துள்ளனர். அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனுதாரர் எதையும் பதிவிடவில்லை. எனவே முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. மேலும், காவல்துறை அதிகாரிகள் குறித்து, தவறாக பதிவிட்ட நெட்டிசன்கள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை நிலம் யார் பெயரில் உள்ளது? சென்னை ஐகோர்ட் அதிரடி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details