மதுரை:புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தாது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்தது. இதன் மூலம் விவசாயிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பயனடைவர். ஆனால், இந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்த அரசு தரப்பில் எந்த முனைப்பும் காட்டவில்லை. எனவே காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 3 கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டு முதல் கட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 கிலோ மீட்டர் கட்டுமான பணிகள் தொடங்கி விட்டது. 3 கட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதில் அதிக இழப்பீடு கேட்டு மனுத் தாக்கல் செய்து உள்ளனர்.