மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மாஞ்சோலையை சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம், சந்திரா ஆகியோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த விசாரணையின் போது தமிழக அரசுத்தரப்பில், "மாஞ்சோலை மக்களுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. TANTEA நிர்வாகத்தால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலாது" என அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "மாஞ்சோலை பகுதி மக்களை பார்ப்பதற்காக செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிப்பதில்லை" என தெரிவிக்கப்பட்டது.