தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை! - Met Update

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Etv Bharat
Rain Related Representative image (Image Credit: ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 8:21 AM IST

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை (மே.18) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வரும் (மே.19) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24 மணி நேர்த்தில் எவ்வளவு மழைப்பொழிவு:தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 6.15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை மாவட்டம் வால்பாறையில் 5.68 சென்டிமீட்டர் மழையும், கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 2.90 சென்டிமீட்டர் மழையும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 2.60 மழையும் பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு - மம்தா பானர்ஜி இரங்கல்! - West Bengal Lightning Death

ABOUT THE AUTHOR

...view details