தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள் உயர்த்தப்படுமா..? சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்! - MINISTER MA SUBRAMANIAN

தமிழக மருத்துவத்துறையில் முதுகலை படிப்பில் காலியிடங்கள் எதுவுமில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 19 hours ago

சென்னை:தமிழக சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வினாக்கள் விடைகள் நேரத்தில் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் உறுப்பினர்களின் கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்து உரையாற்றுகையில், '' தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் தொகுதியில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது. எனவே, பூந்தமல்லி தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 60 கோடியில் 50 ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் பணி நியமனங்கள் முடிவடைந்து, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன'' என்றார்.

தொடர்ந்து திமுக உறுப்பினர் பிச்சாண்டி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் 100 மருத்துவ இடங்கள் உள்ளது. 150 இடங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.

காலியிடங்கள் எதுவுமில்லை

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 100 இடங்கள் உள்ளன. விரைவில் மத்திய அமைச்சரை சந்திக்கும் போது இது தொடர்பாகவும் கோரிக்கை வைக்கப்படும். மருத்துவத்துறையில் முதுகலை படிப்பில் (PG) காலியிடங்கள் எதுவுமில்லை. ஒன்று இரண்டு இருந்தாலும் அது மத்திய நடவடிக்கையால் மட்டுமே தான் இருக்கும். மாநில அரசு நடவடிக்கையால் காலி இடங்கள் எதுவும் இருக்காது. தமிழகம் முழுவதும் 1.44 கோடி குடும்பங்கள் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,786 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்படுகிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கிறோம்.

ஆம் ஆத்மி மோஹால் கிளினிக்

சுமார் 60 கோடி மதிப்பீட்டில் 50 புதிய நகர்ப்புற சுகாதார நிலையங்களை அமைக்கும் பணி முடிவடைந்து இருக்கிறது. சுகாதார நிலையங்களில் பணி நியமனங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது முடிந்து அவை அனைத்தும் பயன்பாட்டிற்கு வரும். டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி மோஹால் கிளினிக் போல தமிழகத்தில் 708 நகர்ப்புற சிறப்பு சுகாதார நிலையங்களை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 21 மாநகராட்சிகளிலும், 61 நகராட்சிகளிலும், 500 சுகாதார நிலையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 208 சுகாதார நிலையங்களில் பணி நியமன பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாவட்ட சுகாதார சங்கம் மூலம் அந்த பணிகள் முடிக்கப்பட்டு அவையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

மேலும் 1,018 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுகாதாரத்துறை கட்டமைப்பை கடந்த மூன்று ஆண்டுகளில் வலுப்படுத்தி வருகிறோம்'' என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details