தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்.. முழு விவரம் இதோ! - Medical college deans announcement - MEDICAL COLLEGE DEANS ANNOUNCEMENT

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் சுப்ரியா சாகு காலியாக இருந்த 14 அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர் பதவிக்கு மருத்துவர்களை நியமித்து உத்தரவிட்டார்.

நியமன அறிக்கை, சுப்ரியா சாகு
நியமன அறிக்கை, சுப்ரியா சாகு (Credits- ETV Bharat Tamil Nadu/ Supriya Sahu X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 10:05 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலியாக இருந்த பணியிடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் சார்பில் தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதனை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் சுப்ரியா சாகு பரிசீலித்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கீழ் காணும் 14 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  1. தற்போதைய சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் ஜி.சிவகுமார் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. தற்போதைய ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.பவானிகள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. தற்போதைய கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் டி.ரவிகுமார் ஈரோடு, பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. தற்போதைய திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கண் மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் வி.ராமலட்சுமிகன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. தற்போதைய தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முடநீக்கியல் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.குமரவேல் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. தற்போதைய மதுரை மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் எல். அருள் சுந்தரேஷ் குமார்மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. தற்போதைய திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஆர்.அமுதா ராணி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. தற்போதைய கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பி.லியோ டேவிட் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. தற்போதைய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கதிரியக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜே.தேவி மீனாள்சேலம், மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  10. தற்போதைய சென்னை மருத்துவக் கல்லூரி தொழுநோய் சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.கலைவாணி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. தற்போதைய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி காது, மூக்கு,தொண்டை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.முத்துசித்ராதேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  12. தற்போதைய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை பேராசிரியர் டாக்டர் வி.லோகநாயகி கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. தற்போதைய கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவ தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் டி.ஜெயசிங் விருதுநகர் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  14. தற்போதைய கோவை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை பேராசிரியர்டாக்டர் எம்.ரோகிணி தேவிவேலூர் மருத்துவக் கல்லூரிமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details