மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருநாய்கள் சாலைகள் குறுக்கே பாய்வதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.
மேலும், நாய்கள் கடித்து பலருக்கு ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.