சென்னை:சென்னை அம்பத்தூரில் நடன ஆசிரியர்களை போற்றும் விதமாக குரு சமர்ப்பணம் எனும் நாட்டிய நிகழ்வு நடைபெற்றது. இதில் நான்கு வயது குழந்தைகள் முதல் 17 வயது வரையிலான இளம்பெண்கள் வரை ஒரே நேரத்தில் குரு சமர்ப்பண நடனமாடினர். இந்த நடன விழாவில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த 300 பேரும் ஒரே நேரத்தில் குரு சமர்ப்பண நடனமாடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
குரு சமர்ப்பண நடனமாடி அசத்திய 300 மாணவிகள்! ட்ரோன் பார்வையில் பிரம்மாண்ட காட்சி - Guru Sarpanna dance world record - GURU SARPANNA DANCE WORLD RECORD
Guru Sarpanna dance world record: சென்னை அம்பத்தூரில் நடன ஆசிரியர்களை போற்றும் விதமாக 300க்கும் மேற்பட்ட மாணவிகள் குரு சமர்ப்பண நடனமாடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
Published : Sep 2, 2024, 9:12 PM IST
இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேரடியாக 300 க்கும் மேற்பட்டோரும், ஆன்லைன் வாயிலாக 300க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்ட நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் அணிவகுத்து நின்ற மாணவிகள் ஒரே மாதிரி அபிநயத்தில் பாடலுக்கு தகுந்த நடனமாடி தங்களது பரத நாட்டிய ஆசிரியர்களுக்கு குரு சமர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து நாட்டியமாடிய மாணவிகளுக்கு 'ராபா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்' ஆசிரியர் பிரசன்னா ராமானுஜம் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.