திருப்பத்தூர்:சென்னையை நோக்கி சரக்கு ரயில்,ஈரோடு மார்க்கமாக இன்று சென்று கொண்டிருந்த நிலையில், திருப்பத்தூர் கட்டேரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென சரக்கு ரயிலின் 17வது பெட்டியின் சக்கரங்கள் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இது தொடர்பாக ரயில்வே துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், ரயில்வே துறை ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, ஈரோடு மார்க்கமாக செல்லும் தன்பாத், ஹலபி ரயில்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.