கோயம்புத்தூர்:கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஜி.கே.வாசன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) அப்போது பேசிய அவர், “கோவை மண்டலத்தின் மறுசீரமைக்கப்பட்ட கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2024 டிசம்பர் 31க்குள் முதல்கட்ட தேர்தல் பணிகளும், ஐனவரி 1ஆம் தேதியில் இருந்து இரண்டாம் நிலை பணிகளும், புதிதாக நியமிக்கப்பட்ட 120 மாவட்ட தலைவர்களால் நடைபெற உள்ளன. தமாகாவினர் தங்கள் சொந்த பொருளாதார நிலையில் இருந்து கட்சியை நடத்துகின்றனர்.
5 வருடத்திற்கு ஒரு முறை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகின்றது, இந்த முறை பெரும்பாலான வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து இருப்பதன் நோக்கம், முதல்வர் ஸ்டாலின் மக்களின் குறைகளை நிறைவாக்குவார் என்ற எண்ணத்தால் வாக்களித்தனர். ஆனால், முதலமைச்சர் அதில் இருந்து தவறி இருக்கிறார்.
மதுரை எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்களை பற்றி பேசும் முதல்வர், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நிதி ஆயோக்கில் அமர்ந்து முதல்வர் தேவைகளை நேரடியாக கேட்டு இருக்க வேண்டும் எனவும், முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பதற்கு ஒரே காரணம் அரசியல் மட்டும்தான்.
நிதி ஆயோக் கூட்டம் என்பது முதல்வர் நேரில் சென்று அழுத்தமாக ஆலோசனை சொல்லக்கூடிய இடம். அதை அவர் செய்ய தவறி இருக்கின்றார். ஆனால், மேற்கு வங்க முதல்வர், ஜார்கண்ட் முதல்வர் பங்கேற்று இருக்கின்றனர். மக்கள் பிரச்னையில் அரசியலை புகுத்தக்கூடாது. இன்று திமுகவில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்வது, முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாததது என அனைத்தும் அவர்கள் பக்கம் இருக்கும் தவறுகளை மறைக்கவே நடத்தப்படுகின்றது.
மேலும், இளைஞரணி யுவராஜ் ராஜினாமா செய்தது குறித்து கூறும்போது, இந்த கட்சியின் அனைத்து நிர்வாகிகளிடமிருந்தும் பதவியை ராஜினாமா செய்து கொடுத்து மறுசீரமைப்பிற்கு உறுதுணையாக இருக்கின்றனர்” என்றார். இதனைத் தொடர்ந்து கட்சியின் பொருளாதாரம் குறித்து கூறுகையில், “தமாக கட்சிக்கு பொருளாதார நெருக்கடி இருக்கிறது, அதையும் மீறி நேர்மையான நிர்வாகிகளுடன் கட்சியை நடத்துகிறோம்” என்றார்.
மேலும், அவர் அரசுக்கு பல கோரிக்கையை முன்வைத்தார். அதில் மின்கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டுவதால், அதை அரசு ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், கோவை பாலக்காடு சாலையில் எல் & டி சாலையினை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும், Sihs காலனி மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றி சரியாக உண்மை நிலையை வெளிப்படுத்தி மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:"மத்திய பாஜக அரசை விரைவில் பதவியிலிருந்து இறக்க வேண்டும்" - கனிமொழி ஆவேசம்!