தேனி: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, கேரளாவில் மாருதி எர்டிகா கார் ஒன்று காணாமல் போயுள்ளது. இந்த நிலையில், காணாமல் போன அதே கார் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதாக காரின் உரிமையாளருக்கு ஜிபிஎஸ் சிக்னல் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, காரின் உரிமையாளர் அளித்த தகவலின் படி, பெரம்பலூர் மாவட்ட போலீசார், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லாபுரம் பிரிவு பாதை என்ற இடத்தில் அதிவேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்துள்ளனர். இதில் காரில் இருந்த மூன்று பேர் காரை விட்டு கீழே இறங்கி தப்பி ஓட முயன்ற போது, பெரம்பலூர் போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.