தமிழ்நாடு

tamil nadu

"திருச்சி காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது" - ஆட்சியரிடம் எஸ்டிபிஐ மனு! - TRICHY GANDHI MARKET

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 3:00 PM IST

TRICHY GANDHI MARKET: திருச்சி காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபிஐ கட்சி வர்த்தக அணி சார்பில் மனு அளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம்  மனு கொடுத்த எஸ்டிபிஐ வர்த்தக அணி நிர்வாகிகள்
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த எஸ்டிபிஐ வர்த்தக அணி நிர்வாகிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி:திருச்சி மாநகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று காந்தி சந்தை. காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867ஆம் ஆண்டு துவங்கி 1868இல் முடிந்தது. அதன்பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927ஆம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டு 1934ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

எஸ்டிபிஐ வர்த்தக அணி நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அதே ஆண்டு காந்தி திருச்சி மார்கெட்டை திறந்து வைத்தார். திருச்சி மாநகரில் நூற்றாண்டுகளாக செயல்பட்டு வரும் காந்தி சந்தையை இடமாற்றம் செய்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காந்தி மார்க்கெட் வளாகம் கட்டி, அங்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் திட்டப் பணிகள் தொடர்பாக வியாபாரிகள் சங்கம் மற்றும் பிரதிநிதிகள் உடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி சார்பில் இன்று (ஜூலை 2) திருச்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது என மனு அளித்தனர். அப்போது, எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர், சாதிக்பாட்ஷா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்துவரும் கமிஷன் வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகளும் பாதிக்காத வகையில் அனைவருக்கும் புதிதாக தொடங்க உள்ள பஞ்சப்பூர் வணிக வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையிலேயே காந்தி மார்க்கெட் தொடர்ந்து செயல்பட வேண்டும். மேலும், திருச்சி மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்வதை ஆட்சியர் தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பெருங்களத்தூரில் இரட்டைக் கொலை.. கழுத்தறுத்து சுடுகாட்டில் வீசிய கொடூரம்..! அதிர்ச்சி பின்னணி - tambaram double murder

ABOUT THE AUTHOR

...view details