சென்னை:ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஐ-போன்களுடன் வரும் காலத்தில் ஐ-பேட்களையும் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இரண்டாண்டு காலத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க பாக்ஸ்கான் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் ஐ-போன்களுடன், ஐ-பேட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.