சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி அனிதா சுமந்த் நடத்தி வந்தார் இந்த நிலையில் இன்று சுமந்த் வந்த இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு ராஜேஷ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்ட நிலையில் பீலா வெங்கடேசன் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இருந்த பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இதனையடுத்து, பீலா வெங்கடேசன் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் P. வில்சன், வீட்டின் மீது ராஜேஷ் தாஸ்க்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்குமாறு ராஜேஷ் தாஸ் தரப்பில் கோரிக்கை விடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும், ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், வீட்டுக்கடனை ராஜேஷ் தாஸ் செலுத்தி வருவதாகவும், தனது உடல் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். இந்நிலையில் வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இவ்வழக்கு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:பூம்பாறை மலை கிராமத்திற்குப் போக்குவரத்து வசதி வேண்டித் தொடரப்பட்ட வழக்கு; பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு!