தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவாக இருந்த முன்னாள் பாஜக நிர்வாகி கைது! - WOMAN SEXUAL HARASSMENT IN DINDIGUL - WOMAN SEXUAL HARASSMENT IN DINDIGUL

அரசுப் பள்ளி ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை இன்று போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்
திண்டுக்கல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 11:04 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தமிழக அரசின் காலை உணவுத் திட்டப் பொறுப்பாளராக 38 வயதுடைய பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

இவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) காலை வழக்கம் போல் பணியில் இருந்த போது புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும், திண்டுக்கல் மேற்கு பாஜக முன்னாள் மாவட்டச் செயலாளருமான மகுடீஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்று சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் 4 நாட்களாகப் பதுங்கி இருந்த மகுடீஸ்வரனை தனிப்படை போலீசார் இன்று (ஏப்ரல் 11) கைது செய்தனர். அவரை திண்டுக்கல் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது பெண் புகார்.. திண்டுக்கல்லில் பரபரப்பு.. - Woman Sexual Harassment In Dindigul

ABOUT THE AUTHOR

...view details