தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; நேரில் ஆஜராகாத நிலையில் வழக்கு ஒத்திவைப்பு! - C VIJAYABASKAR CASE UPDATE - C VIJAYABASKAR CASE UPDATE

C VIJAYABASKAR CASE UPDATE: சொத்துக்குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இன்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத நிலையில், நீதிபதி வசந்தி வழக்கை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் விஜயபாஸ்கர் கோப்புப் படம்
புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் விஜயபாஸ்கர் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 4:47 PM IST

புதுக்கோட்டை:கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருமானத்தை விட அதிகமாக 53 சதவீதம், குறிப்பாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் கடந்த 2022, மே 22ஆம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜராகி, நீதிபதி ஜெயந்தி முன்பு 216 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், இந்த குற்றப்பத்திரிகையில் சென்னை தி.நகரில் 14 கோடி ரூபாய் மதிப்பில் வீடு, அசையும் சொத்துக்களான 70க்கும் மேற்பட்ட வாகனங்கள், தொழிற்சாலைகள் என 800 சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமாக வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கி பத்தாயிரம் பக்க சொத்து ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, அந்த நீதிமன்றம் மூலம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், கடந்த 2023 ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதுவரை 16 முறை இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில், 6 முறை விஜயபாஸ்கரும், இருமுறை அவரது மனைவி ரம்யாவும், 10 முறை இவர்களது வழக்கறிஞர்களும் விசாரணைக்கு ஆஜராகினர். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, 17வது முறையாக இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரோ, இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக உள்ள அவரது மனைவி ரம்யாவோ நேரில் ஆஜராகவில்லை. இவர்களுக்குப் பதிலாக இவர்களது வழக்கறிஞர்கள் ஆஜரான நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினரும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் இந்த வழக்கில் ஆஜராகினர்.

இந்நிலையில் தான், இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத் துறையினர் லஞ்ச ஒழிப்பு துறையினர் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகை மற்றும் சொத்து ஆவணங்களின் நகல்களை முழுமையாக கேட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிஆர்பிசி 237-ன் படி கேட்காமல் சிஆர் பிசி 210-ன் படி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்து புதிதாக சிஆர்பிசி 237-ன் படி மனுத்தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்யும் பொழுது, எந்த அடிப்படையில் ஆவணங்கள் தேவை என்று குறிப்பிடவும் நீதிபதி சுபத்ராதேவி அறிவுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி வசந்தி முன்னிலையில் 18வது முறையாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக விஜயபாஸ்கர் ஆஜராகாத நிலையில், நீதிபதி செப்டம்பர் 25ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:செப்.23இல் விக்கிரவாண்டியில் த.வெ.க மாநாடு?... 1.5 லட்சம் பேருடன் 150 ஏக்கரில் பிரமாண்டமாக நடத்த திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details