தமிழ்நாடு

tamil nadu

விளையாடிய பாம்புகளை பிரித்த மக்கள்.. குழியில் பதுங்கிய பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினர்! - snake caught in Tirupattur

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 2:48 PM IST

Snake caught in Tirupathur: திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பகுதியில் வீட்டின் அருகே உள்ள குழியில் பதுங்கிய பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.

பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்
பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அதிபெரமனூர் பகுதியில் உள்ள தம்பா தெருவில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து விளையாடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், ஆர்வமுடன் அந்த இரண்டு பாம்புகளை தங்களிடம் இருந்த செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அதை உணர்ந்த அந்த இரண்டு பாம்புகளும் பிரிந்து ஒவ்வொரு திசையில் சென்றன. அதில் ஒரு பாம்பு நதியா என்பவரின் வீட்டின் அருகே சென்று பதுங்கிக் கொண்டது. மற்றொரு பாம்பு ஒரு புதருக்குள் சென்றது. பின்னர், இது குறித்து நதியா, நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த தகவலின் அடிப்படையில், நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று, நதியா வீட்டிற்கு அருகே உள்ள ஒரு குழியில் பதுங்கிய பாம்பை லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மற்றொரு பாம்பு ஒரு புதருக்குள் நுழைந்து தப்பித்துச் சென்றது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஜேசிபியில் சிக்கி கருவுற்றிருந்த நல்ல பாம்பு பலி.. மதுரை அருகே சோகம்!

ABOUT THE AUTHOR

...view details