தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அஜிதா ஆக்னலா.? பாலாவா..? தூத்துக்குடி தவெக-வினரிடையே வெடித்த கோஷ்டி பூசல்..! மாவட்ட செயலாளர் கோஷத்தால் பரபரப்பு! - THOOTHUKUDI TVK SUPPORTERS CLASH

தூத்துக்குடியில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இடத்தில் தவெக நிர்வாகிகளிடையே யார் மாவட்ட செயலாளர் என்ற கோஷத்தினால் பரபரப்பு நிலவியது.

இரு தரப்பினர்
இரு தரப்பினர் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 1:36 PM IST

தூத்துக்குடி:திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில், விஜய் வரும் 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு அஜிதா ஆக்னல் மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் இடையேயான பிரச்னையால் தூத்துக்குடி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

'தூத்துக்குடி மக்களின் தந்தை' என்று போற்றப்படும், தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் 155வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் உள்ள குரூஸ் பர்னாந்திஸ் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 27 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்!

அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட பெண் பொறுப்பாளராக அஜிதா ஆக்னல் என்பவர் இருந்து வருகிறார். இவர் பல்வேறு இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களையும் கட்சியில் உறுப்பினராக சேர்க்க மாவட்டம் முழுவதும் சுற்றி வருகிறார். அதேபோல, கட்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற பொறுப்பாளராக பாலா என்பவர் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கட்சி தொடங்கப்பட்டத்திலிருந்தே நானா? நீயா? என கடுமையான கோஷ்டி பூசல் நிலவி வந்தது.

இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் பாலா தரப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குரூஸ் பர்னாந்திஸ் திருவுருவ சிலைக்கு இன்று மாலை அணிவிக்க வந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையிலான நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்டோர் மாலை அணிவிக்க வந்தனர்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பாலா தரப்பை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் 'பாலா வாழ்க' என்ற கோஷத்தை எழுப்பினர். மேலும், அஜிதா ஆக்னல் தலைமையிலான கட்சி நிர்வாகிகளை மாலை அணிவிக்க மேலே ஏறவிடாமல் சிறிது நேரம் திருவுருவ சிலை முன்பு கோஷங்களை எழுப்பினர்.

அதன் பின்பு காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், அதன்பின் கீழே இறங்கிய பாலா தரப்பினர் கீழே இறங்கியும் கோஷங்களை விடாமல் ஒலித்து கொண்டே இருந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு வந்து விடுமோ என கருதி இருவருக்கும் இடையே நின்று இருவரையும் உடனடியாக மாலை அணிவித்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

அதன் பின்பு அஜிதா ஆக்னல் தலைமையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அஜிதா ஆக்னல் தலைமையிலான நிர்வாகிகள் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திற்கு புகழ் வணக்கம் என்ற கோஷங்களை மட்டுமே எழுப்பினர். அதன் பின்பு கிளம்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் கட்சியை தொடங்கி மாநாட்டை முடிந்துள்ளார். அதற்குள் தூத்துக்குடியில் இரு பொறுப்பாளருக்கும் இடையில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி திமுகவின் கோட்டையாக கருதப்படும் பட்சத்தில், தேர்தலில் பலமான வேட்பாளரை எதிர்கொள்வதற்கு ஒற்றுமை முக்கியம். ஆனால், தூத்துக்குடியில் தாவெகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிக்குள் இருக்கும் கோஷ்டி பூசலால், இம்மாவட்டத்தில் தாவெக எப்படி வலுவான கட்சியாக மாறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details