தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு! - SEXUAL ASSAULT

சென்னையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் சிறுமியின் அண்ணன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 8:12 PM IST

சென்னை : சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், தனது மகளை கணவரின் பொறுப்பில் விட்டுள்ளார் அந்த சிறுமியின் தாய். 3 வருடங்களாக தந்தையுடன் வசித்து வந்த 13 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக் கிழமை (நவ.17) தனது தாயை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சைக்காக சிறுமியை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிறுமியின் தாய் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாய் கேட்டபோது, அந்த சிறுமியின் தந்தையும், அண்ணனும் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி கூறியுள்ளார்.

இதையும் படிங்க :வேலூரில் சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: போக்சோவில் 3 பேர் கைது!

இச்சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்ததாகவும், ஆனால் அங்கிருந்த காவல் ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் காவல் நிலைய வாசலிலேயே தனது குழந்தைக்கு நீதி கேட்டு தாய் போராடியதால், இச்சம்பவம் உயரதிகாரிகளுக்கு தெரிய வருகையில், உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமியின் தந்தை மற்றும் அண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அதேபோல், வாணியம்பாடி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இடியாப்பம் விற்று வருவதாக கூறப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர், நேற்று (நவ.21) மாலை பள்ளி முடித்து விட்டு சாலையில் நடந்து சென்ற அரசுப் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உடனடியாக இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இளைஞரைப் பிடித்து கைகளை கட்டி சரமாரியாக தாக்கி, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details