ஈரோடு: தாளவாடி அருகே உள்ள மாதஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜண்ணா(வயது 56). விவசாயியான இவர் தாளவாடி - பனஹள்ளி சாலையில் எரஹனள்ளி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அருளவாடி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (வயது 44) என்பவர் ராஜண்ணா ஓட்டிச் வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியுள்ளார்.
இந்த விபத்தில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜண்ணா உயிரிழந்தார். காயம் அடைந்த மாதேஷுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.