சென்னை:உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதி இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதில் ஒன்றிற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும், பொறுப்பு தலைமை நீதிபதியுமான மகாதேவனை நியமிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், இந்த பரிந்துரையை ஏற்ற அமைச்சகம், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த நிலையில், அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, மகாதேவனுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நீதிபதி மகாதேவன் தனது பணிக்காலத்தில் 97 ஆயிரத்து 116 வழக்குகளில் தீர்வு கண்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்திலும் அவரது பணி சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.