தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்மிடிப்பூண்டியில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞர்..உடலை வாங்க மறுக்கும் உறவினர்களின் கோரிக்கை என்ன? - Gummidipoondi encroachment issue - GUMMIDIPOONDI ENCROACHMENT ISSUE

Gummidipoondi Encroachment Issue: கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்த இளைஞர், உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த குடும்பத்தினர்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த குடும்பத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 10:26 AM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழியைச் சேர்ந்தவர் கல்யாணி. இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த ஜூலை 4ஆம் தேதி ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றனர்.

அப்போது கல்யாணியின் மகன் ராஜ்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீரென வீட்டிற்குள் சென்று தாழிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்த போது உடலில் தீப்பற்றிய ராஜ்குமார் அலறியடித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். உடனடியாக காவல் துறையினர் தீயணைப்புக் கருவி உதவியுடன் ராஜ்குமார் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து, அருகிலிருந்த கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.

உயிரிழந்த இளைஞரின் தாய் கல்யாணி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், 50சதவீதம் தீக்காயம் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 3 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்தும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு:இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அவரது கணவர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜ்குமாரின் குடும்பத்தினர் மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ராஜ்குமாரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது ரூ.5 லட்சம் நிதி உதவி, அரசு வேலை, வீட்டுமனையுடன் அரசு சார்பில் வீடு கட்டித் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி:ஆனால் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக வேலை வாய்ப்பு வழங்க ஆவண செய்யப்படும் என ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை ஏற்க மறுத்த ராஜ்குமாரின் தாய் கல்யாணி "எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்க போவதில்லை என தெரிவித்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.இது குறித்து கல்யாணி கூறுகையில்,

"இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்த அகதிகள் தங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அடிப்படை உரிமைகளை வாங்கி உள்ளது. அகதிகள் என்ற ஒற்றைக் காரணத்தினால் எங்களை மிரட்டி இங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என துடிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் அவரது கணவர் சேகர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றிட பட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாஜகவில் 124 ரவுடிகளா? போட்டா போட்டியாக பட்டியல் வெளியிடும் செல்வப்பெருந்தகை - அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details